வெளிநாட்டு வாழ்கை பற்றிய ‘கனவுல வாழுறேனே’ பாடல் கத்தாரில் வெளியீடு
நூருல் ஹுதா உமர்
வெளிநாட்டில் பணி செய்யும் மக்களின் வலிகளைச் சொல்லும் கனவுல வாழுறேனே தனியிசைப்பாடல் வெளியிட்டு விழா ஸ்கை தமிழ் வலையமைப்பின் ஏற்பாட்டில் கத்தார் வொண்டர் பேலஸ் ஹோட்டலில் ஸ்கை தமிழ் பணிப்பளார் ஜே.எம்.பாஸித் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் ‘கனவுல வாழுறேனே’ பாடலின் ஆசிரியரும், தயாரிப்பாளருமான த. சண்முக பாண்டியன் பாடலை வெளியீட்டார். பாடலுக்காக பணியாற்றிய பாடல் இயக்குநர் செபாஸ்டியன், இசையமைப்பாளர் மோகன் ராம், நடிகை இவள் நந்தினி, நடிகர் அரவிந்த் ஆகியோர் நிகழ்நிலைகாணொலி மூலம் நிகழ்வில் உரை நிகழ்த்தினர்.
ஸ்கை தமிழ் ஊடக வலையமைப்பின் முகாமையாளர் அஸ்வர் ரிஸ்வி நெறிப்படுத்திய இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக கத்தார் தமிழர் சங்கத்தின் நிறுவனர் டாக்டர் துரைசாமி குப்பன், கத்தார் தமிழ் சங்க முன்னாள் தலைவர் விஜயன் பாபுராஜ், கத்தார் தமிழர் சங்க துணைத் தலைவர் சக்திவேல் மகாலிங்கம், கத்தார் தமிழர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் கௌரி சங்கர், தொழிலதிபர் யாழினி குமார், ஒருங்கிணைந்த தமிழர் பேரவை தலைவர் சமீர், கத்தார் முத்தமிழ் மன்ற நிர்வாகிகளான குரு, சிந்து தமிழ், ரெஜினா, விஜய் ஆனந்த், கவிஞர் சிவசங்கர், கத்தார் ரஜினி மக்கள் மன்றம் தலைவர் ரஜினி கீர்த்தி, கத்தார் தமிழர் முன்னேற்ற சங்கத்தின் பொதுச் செயலாளர் கார்த்திக், கவிஞர் மனோ கௌதம், கத்தார்- இலங்கை மகளிர் அமைப்பு பிரியா, தோஹா வானொலி தமிழ் ரினோஸ், சத்யராஜ், செந்தமிழ் செல்வன், முருகன், தஸ்தகீர் சுலைமான், மணிகண்டன் ஐயப்பன், சகாபாக்கள் நூலக தமிழ்மகன் அகமது பைசல், கவிஞர் தஞ்சாவூரான், கவிஞர் சிக்கந்தர் ஆகிய பல முக்கியஸ்ர்கள் கலந்து கொண்டனர்.
‘கனவுல வாழுறேனே’ பாடலை விஜய் டிவி சுப்பர் சிங்கர் புகழ் சாம் விஷால் பாடியுள்ளார். இந்நிகழ்வில் ‘கனவுல வாழுறேனே’ பாடலை வெளியிட்ட பாடலாசிரியர், தயாரிப்பாளர் டீ. சண்முக பாண்டியனை ஸ்கை தமிழ் ஊடக வலையமைப்பின் பணிப்பளார் ஜே.எம். பாஸித் மற்றும் முகாமையாளர் அஸ்வர் ரிஸ்வி ஆகியோர் கௌரத்தனர். கத்தார் தமிழ் உறவுகள் அமைப்பினால் ‘கனவுல வாழுறேன்’ பாடலுக்கு சிறப்பான நடனம் ஒன்றை நிகழ்த்தினர்.
கருத்துக்களேதுமில்லை