விசேட சுற்றிவளைப்பில் போதைப் பொருட்களோடு 4 பெண்கள் உட்பட 10 பேர் கைது
கண்டி, போகம்பர பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளில் போதைப்பொருட்களுடன் 10 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கண்டி பொலிஸார், பொலிஸ் மோப்ப நாய் பிரிவினர் ஆகியோர் இணைந்து மேற்கொண்ட விசேட போதைப்பொருள் சுற்றிவளைப்பில் பெண்கள் நால்வர் உட்பட 10 பேர் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து 39 கிராம் 265 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளது.
இதன்போது கைதுசெய்யப்பட்டவர்களில் ஆண்கள் 26 முதல் 52 வயதுடைய ஹீரஸ்ஸகல, சுதும்பொல, மஹியாவை, கண்டி மற்றும் திகன பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும், பெண்கள் நால்வரும் 24 முதல் 49 வயதுடைய கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் கண்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
இந்த சுற்றிவளைப்பின்போது 48 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை