எழுத்துமூல அறிவிப்பு எதுவும் இதுவரை வழங்கப்படவில்லை – கட்சியில் இருந்து நீக்கியமை குறித்து பீரிஸ்
பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பதவியில் இருந்து தம்மை நீக்கியதாக எழுத்துமூல அறிவிப்பு எதுவும் இதுவரை வழங்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், அவ்வாறான அறிவித்தல் கிடைத்தால் அதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் உயர் நீதிமன்றம் வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பில் ஜனநாயகம் நிலை நாட்டபட்டுள்ளது என்றும் அதற்கு தலை வணங்குவதாகவும் கூறியுள்ளார்.
இதேவேளை அரசாங்கம் விரும்பாமலோ தேர்தலை சந்திக்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை