ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்துடன் இணையும் எண்ணமில்லை – ராஜித
தேசிய அரசாங்கம் தொடர்பான பேச்சின் போது ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துடன் இணைய விருப்பம் தெரிவித்திருந்த போதிலும், தற்போது அரசாங்கத்துடன் இணைவதற்கான எந்த திட்டமும் தன்னிடம் இல்லை என ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில், அவர் கடந்த காலங்களில் வகித்து வந்த சுகாதார அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாக வெளியான செய்திகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடியை சமாளிக்க ஜனாதிபதியின் சமீபத்தைய வேலைத்திட்டம் உள்ளிட்ட திட்டங்களை பாராட்டி ராஜித சேனாரத்ன வெளியிட்ட சில அறிக்கைகளால் அவரது கட்சியின் மூத்த உறுப்பினர்களின் விமர்சனத்திற்கு ஆளானார்.
மேலும் சுகாதார அமைச்சர் போன்ற ஒரு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டால், நிலவும் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதில் முக்கியப் பங்காற்ற முடியும் என கடந்த வாரம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ராஜித சேனாரத்ன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை