கெப்பிட்டிகொல்லாவயில் மாற்றுத்திறனாளி பிள்ளைகளுடன் தற்கொலைக்கு முயன்ற தாய்
வாழ்க்கை செலவு அதிகரித்துள்ளமை மற்றும் தனது இருமாற்றுத்திறனாளி ஆண்பிள்ளைகளின்மருத்துவ செலவிற்கு பணம் இல்லாததன் காரணமாக தாயொருவர் தனது இரு பிள்ளைகளுடன் தற்கொலை செய்து கொள்ள முயன்றவேளை அவரின் 21 வயது மகன்உயிரிழந்த பரிதாப சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ்ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அநுராதபுரம் கெப்பிட்டிகொல்லாவ பொலிஸ் பிரிவில் கணுகஹவெல பிரதேசத்தில் பெண்ணொருவர் தனது அங்கவீனமுற்ற மூத்த மகன் மற்றும் பேச்சுத்திறனற்ற இளைய மகன் ஆகியோரை கிணற்றில் தள்ளி விட்டு , தானும் தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கெப்பிட்டிகொல்லாவ பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், தாயால் கிணற்றில் தள்ளி விடப்பட்ட ஒரு பிள்ளை உயிரிழந்துள்ளதாகவும் , ஏனைய பிள்ளையும் தாயும் மீட்கப்பட்டு அநுராதபுரம் வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதன்போது உயிரிழந்தவர் 21 வயது இளைஞன் ஆவார். இவரின் சடலம் அநுராதபுரம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, கெப்பிட்டிகொல்லாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை