காணாமல்போன யுவதியை கண்டுபிடிக்க பொதுமக்களின் ஒத்துழைப்பைக் கோரும் பொலிஸார்
மாவனல்ல பொலிஸ் பிரிவில் உஸ்ஸாபிட்டி பிரதேசத்தில் யுவதியொருவர் கடந்த ஜனவரி 18ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக அவரது உறவினர்களால் மாவனல்ல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.
28 வயதுடைய குறித்த யுவதி உஸ்ஸாபிட்டி – லெவுகே பிரதேசத்தைச் சேர்ந்த சச்சிந்திரா கீதாஞ்சலி ஜயரத்ன என்பவராவார்.
இவர் தொடர்பில் இதுவரையில் எவ்வித தகவல்களும் கிடைக்கப் பெறவில்லை என்பதால் அவரைக் கண்டு பிடிப்பதற்கு பொது மக்களின் ஒத்துழைப்பினைக் கோருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த யுவதி தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 035-2247222 என்ற மாவனல்ல பொலிஸ் நிலைய தொலைபேசி இலக்கத்திற்கும் , 071-8591418 என்ற மாவனல்ல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் இலக்கத்திற்கும் அழைத்து தெரியப்படுத்த முடியுமெனவும் பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை