இலங்கையின் தேங்காய்ப்பாலுக்கு வெளிநாட்டு சந்தையில் அதிக கிராக்கி
இலங்கையின் தேங்காய் பாலுக்கு வெளிநாட்டு சந்தையில் அதிக தேவை காணப்படுவதாக தென்னை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் மாத்திரம் 40 ஆயிரம் மெற்றிக் தொன் தேங்காய்ப்பால் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக அதன் பிரதிப் பணிப்பாளர் சரத் எதிரிசிங்க தெரிவித்துள்ளார். இதன்மூலம் மேலும் 15 கோடி அமெரிக்க டொலர்களை சம்பாதித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஜேர்மனி, இத்தாலி போன்ற நாடுகளில் இலங்கையின் தேங்காய் பாலுக்கு அதிக தேவை இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
கருத்துக்களேதுமில்லை