ஜூலை மாதத்துக்குள் பொதுமக்களுக்கு பஸ் கட்டணத்தில் நிவாரணம் – கெமுனு விஜேரத்ன
எதிர்வரும் ஜூலை மாதத்துக்குள் பொதுமக்களுக்கு பஸ் கட்டண நிவாரணத்தை வழங்க முடியும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
‘நான் கணக்குப் பார்த்தேன், 2023 ஆம் ஆண்டின் இரண்டு மாதங்கள் சில நாள்கள் கடந்துவிட்டன, இப்போது இந்த எதிர்ப்புகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் காரணமாக நாம் சுமார் 50 கோடி ரூபாவை இழந்துள்ளோம். குறிப்பாக, மேல் மாகாணத்திலேயே அதிக நஷ்டங்களை எதிர்கொண்டோம்.
இது தொடர்பில் மீண்டும் பொலிஸ் மா அதிபர் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு நினைவூட்டவுள்ளோம். அவ்வாறு செய்ய முடியாவிட்டால், மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் பொலிஸாருக்கு எதிராக கண்டிப்பாக நீதிமன்றத்தை நாட வேண்டியிருக்கும். – என்றார்.
கருத்துக்களேதுமில்லை