தெஹிவளை, கொட்டாஞ்சேனை பிரதேசங்களில் திருடப்பட்ட முச்சக்கரவண்டிகளுடன் ஐவர் கைது!

ஓட்டோ திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொரலஸ்கமுவ பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற ஓட்டோ திருட்டு தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் இவர்கள் கடந்த திங்கட்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின்போது தெரிய வந்த தகவலின் அடிப்படையில் தெஹிவளை மற்றும் கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுகளில் திருடப்பட்ட 3 ஓட்டோக்களையும் கைப்பற்றியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 23 மற்றும் 32 வயதுடைய தெஹிவளை, நாவலப்பிட்டி, ரொசெல்ல, ஹற்றன், கொட்டகலை ஆகிய இடங்களை வசிப்பிடமாகக் கொண்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொரலஸ்கமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.