இலங்கை வான் பரப்பை பயன்படுத்தும் வெளிநாட்டு விமானங்களுக்கான கட்டணங்கள் அதிகரிக்கப்படுகின்றன!
இலங்கையின் வான் பரப்பை பயன்படுத்தும் வெளிநாட்டு விமானங்கள் மூலம் வருடாந்த வருமானத்தை ஒரு கோடியே 20 லட்சம் அமெரிக்க டொலர்கள் வரை அதிகரிக்கும் வகையில் விமானப் போக்குவரத்து சேவைக் கட்டணத்தை அதிகரிக்க துறைமுகங்கள், கடற்படை மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த புதிய கட்டணங்கள் எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் அமுலுக்குவரும் நிலையில் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த விமானக் கட்டணங்கள் திருத்தப்பட்டுள்ளன.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை