கடந்த மாதம் கண்டி பொலிஸ் வலயத்தில் போதைப் பொருள் தொடர்பாக மொத்தம் 1845 வழக்குகள் பதிவு – மத்திய பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபர்
கடந்த மாதம் கண்டி பொலிஸ் வலயத்தில் போதைப் பொருள் தொடர்பாக மொத்தம் 1845 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.
கண்டி செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் பாதுகாப்பு தொடர்பாக அவர் கருத்து வெளியிடும் போதே இதனைத் தெரிவித்தார். பாராளுமன்ற அங்கத்தவர் குணதிலக ராஜபக்ச தலைமையில் இடம் பெற்ற இக்கூட்டத்தில் அவர் மேலும் தெரிவித்ததாவது.
கடந்த மாதத்தில் மட்டும் கண்டி மாவட்டத்தில் ஹெரோயின் தொடர்பான 564 வழக்குகளும், ஐஸ் போதைப் பொருள் தொடர்பாக 142 வழக்குகளும் , கஞ்சா போதைப் பொருள் தொடர்பாக 1139 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டதாகவும் மத்திய பிராந்திய பிரதி பொலீஸ்மா அதிபர் மகிந்த திசாநாயக்கா மேலும் தெரிவித்தார்.
போதைப் பாவனையைக் கட்டுப்படுத்த தொடர்ந்து பாடசாலை மாணவர்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் இதற்காக கண்டி மாவட்டத்தில் மட்டும்287 பாடசாலைகள் அவதானிக்கப்பட்டு அவர்கள் அறிவுறுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். இச்செயற்பாடு தொடர்ந்தும் நடை பெறும் என்றும் குறிப்பிட்டார்.
கருத்துக்களேதுமில்லை