பல்கலைகழக பகுதிக்குள் மாணவர்கள் மீது தாக்குதல் – கல்விமான்கள் கடும் கண்டனம்
கொழும்பில் செவ்வாய்கிழமை பல்கலைகழக வளாகத்திற்குள் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து பல்கலைகழக ஆசிரியர்கள் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
மார்ச் ஏழாம் திகதி கொழும்பு பல்கலைகழக வளாகத்திற்குள்ளும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் இடம்பெற்ற மனிதாபிமானமற்ற கீழ்த்தரமான வன்முறை தாக்குதல்களை கொழும்பு பல்கலைகழகத்தின் சட்டபீட சட்ட ஆசிரியர்களான நாங்கள் கண்டிக்கின்றோம்.
பொலிஸாரும் கலகதடுப்பு பொலிஸாரும் கண்ணீர் புகையை பயன்படுத்தி மேற்கொண்ட அந்த தாக்குதல் காரணமாக பல மாணவர்கள் படு காயமடைந்துள்ளனர்.
அதேவேளை இந்த தாக்குதல் காரணமாக பல்கலைகழகத்தின் ஏனைய உறுப்பினர்களிற்கும் ஆபத்து ஏற்படும் நிலை காணப்பட்டது.
சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் உறுதி செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை நிலைநாட்டுவது குறித்து அர்;ப்பணிப்புடன் உள்ளவர்கள் என்ற அடிப்படையில் அமைதியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களி;ன் உரிமைகள் மறுக்கப்பட்டதை நாங்கள் கண்டிக்கின்றோம்.
நியாயபூர்வமான கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கான பகுதி என பல்கலைக வளாக பகுதிக்கு காணப்படும் உரிமை மீறப்பட்டதையும் நாங்கள் கண்டிக்கின்றோம் என தெரிவித்துள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை