மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையில் கதிரைகளை திருடி வந்த காவலாளி ஒருவர் கைது

மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையில் உள்ள கதிரைகளை திருடி விற்பனை செய்துவந்த காவலாளி ஒருவரை புதன்கிழமை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேற்படி ஆசிரியர் கலாசாலையில் நிர்வாகம் கதிரை தொடர்பில் கணக்கு எடுத்த போது 6 மரக்கதிரைகள் உட்பட 40 கதிரைகள் காணாமல் போயுள்ளதைக் கண்டு பிடித்துள்ளனர்.

இதனையடுத்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு விசாரணையில் ஆசிரியர் கலாசாலையில் கடமையாற்றிவரும் 47 வயதுடைய புதூரைச் சேர்ந்த காவலாளி ஒருவரை கைது செய்தனர்.

இவர் தினமும் கடமைமுடிந்து வீட்டுக்குச் செல்லும் போது ஒவ்வொரு கதிரைகளை திருடிக் கொண்டு சென்று அந்த பகுதியிலுள்ள கடை ஒன்றில் பிள்ளைக்கு மருந்துவேண்ட பணம் தேவை எனவும் தனது வீட்டுக்கதிரை எனவும் தெரிவித்து பிளாஸ்ரிக கதிரை ஒன்றை 700 ரூபாவுக்கும் மரக்கதிரையை 2 ஆயிரம் ரூபா வீதம் விற்பனை செய்துள்ளார் என ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து திருடப்பட்டு விற்பனை செய்யப்பட்ட கதிரைகளை மீட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட காவலாளியை இன்று (வியாழக்கிழமை) மட்டக்களப்பு நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.