மாணவன் மீது கொடூரத் தாக்குதல்: அதே பாடசாலை மாணவர்கள் மூவர் கைது!
மொரந்துடுவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 11ஆம் ஆண்டு கல்வி கற்கும் மாணவர் ஒருவரைக் கொடூரமான முறையில் தாக்கிய குற்றச்சாட்டில் அதே பாடசாலையைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மொரந்துடுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அதே கல்லூரியில் பத்தாவது மற்றும் பன்னிரண்டாம் ஆண்டுகளில் கல்வி பயிலும் மூன்று மாணவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்
தாக்குதலுக்கு உள்ளான மாணவனின் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதன் காரணமாக நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முன்னதாக தாக்குதலுக்கு உள்ளான மாணவன் மற்றுமொரு மாணவனை தாக்கிய சம்பவம் தொடர்பில் எழுந்த வாக்குவாதமே இந்த தாக்குதல் இடம்பெறக் காரணமாக இருந்ததாக பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை