சொகுசு வீட்டை வாடகைக்குப் பெற்று அங்கிருந்த குளிரூட்டிகளை திருடிய குற்றச்சாட்டில் பெண் கைது!
வாடகைக்குப் பெறப்பட்ட சொகுசு வீடு ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த சுமார் 15 லட்சம் ரூபா பெறுமதியான குளிரூட்டிகளை திருடினார் எனக் கூறப்படும் பெண் ஒருவர் கினிகத்தென்ன வீடொன்றில் பதுங்கியிருந்தபோது கைதுசெய்யப்பட்டார் என மலையக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வீட்டின் உரிமையாளரிடமிருந்து கிடைத்த தகவலின் பிரகாரம் இவர் தனது வீட்டுக்குச் சென்று குளிரூட்டிகள் தொடர்பில் ஆராய்ந்தபோது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த 6 குளிரூட்டிகளும் காணாமல் போயிருந்ததைக் காணமுடிந்ததாக கஹதுடுவ பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதை சந்தேகநபர் அறிந்ததும் அவர் அவரது கிராமமான கினிகத்தென்ன பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்று தலைமறைவாக இருந்துள்ளார்.
இந்நிலையிலேயே சந்தேகநபர் அங்கு வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை