இரவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு பஸ்களில் 395 லீற்றர் டீசலை திருடிய இருவர் இங்கிரியவில் கைது!
இங்கிரிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நம்பபான பிரதேசத்தில் இரவு வேளைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு பஸ்களிலிருந்து 395 லீற்றர் டீசலை திருடிய சந்தேகத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சந்தேக நபர்கள் 35 மற்றும் 39 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
சிசிரிவி கெமராக்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்த சிறிய ரக லொறி ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
திருடப்பட்ட டீசலை விற்பனை செய்து பணம் சம்பாதித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை