மன்னாரில் ஒரு தொகுதி ‘டைனமைட்’ வெடி பொருளுடன் இருவர் கைது!
மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளிமுனை கடற்கரை பகுதியில் வைத்து ஒரு தொகுதி ‘டைனமைட்’ வெடிபொருட்களுடன் 2 சந்தேக நபர்கள் நேற்று (வியாழக்கிழமை) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்கள் 200 ‘டைனமைட்’ மற்றும் அதற்கு பயன்படும் 160 அடி நூல் மற்றும் ஏற்றி வைத்து இருந்த பட்டா வாகனம் என்பன நேற்று மாலை பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் துல்சான் நாகாவத்த வின் பணிப்பில்,உதவி பொலிஸ் அத்தியட்சகர் பிரபாத் விதானகே வின் வழிகாட்டலில் மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு தற்காலிக பொறுப்பதிகாரி உ.பொ.ப.ஜெயவர்த்தன பொ.சா . ரத்னமணல தலைமையிலான அணியினரே மேற்படி டைனமைட் வெடி பொருட்களை மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் நாரம்பன பகுதியை சேர்ந்த 35, 54 வயதுடையவர்கள் என தெரிய வந்துள்ளது.
மேற்படி கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் மேலதிக விசாரணையின் பின் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளது.
கருத்துக்களேதுமில்லை