இணுவில் பகுதியில் வீட்டை உடைத்து களவாடிய மூவர் கைது!

வீட்டை உடைத்து வீட்டு தளபாடப் பொருட்களை களவாடிய மூவரை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இணுவில் பகுதியில் வைத்து சந்தேக நபர்களை இன்றைய தினம் கைது செய்துள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ். சாவகச்சேரி கெரடாவில் பகுதியில் வீடொன்றை உடைத்து அங்கிருந்த வீட்டுத் தளபாடப் பொருட்கள் கடந்த மாதம் களவாடப்பட்டிருந்தன.

அதனை அடுத்து வீட்டு உரிமையாளரால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த சாவகச்சேரி பொலிஸார் இணுவில் பகுதியில் வீடொன்றில் தங்கியிருந்த மூவரை கைது செய்துள்ளதோடு களவாடிய பொருட்களையும் மீட்டுள்ளனர். கைதானவர்கள் சாவகச்சேரி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.