சவுக்கம் காட்டில் திடீர் தீப்பரவல்! மணல்காடு பகுதியில் சம்பவம்
யாழ்ப்பாணம் – வடமராட்சிப் பகுதியில் உள்ள மணல்காடு சவுக்கம் காட்டில் வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மேற்படி தீப்பரவல் தொடர்பாக பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரயந்த அமரசிங்கவின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பருத்தித்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பு அதிகாரி சேந்தன் தலமையிலான குழுவினர் பிரதேச மக்களுடன் இணைந்து அங்கிருந்து பருத்தித்துறை பிரதேச சபை மற்றும் இராணுவத்தின் உதவியுடன் இரவு 11 மணியளவில் தீ கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
தீ பரவிய குறித்த பகுதியில் இராணுவம், பொலிஸார், மக்கள் அனைவரும் இணைந்து மேலும் தீ பரவாமல் மரங்களுக்கு கீழிருந்த குப்பைகளை அகற்றியும் மணல் மண்ணால் தடுப்பு அணை அமைத்தும், பிரதேச சபையின் நீர்த்தாங்கி மூலம் நீரை ஊற்றியும் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.
குறித்த மணல்காடு சவுக்கம் காட்டில் விறகு வெட்டுவதற்காக காட்டுக்கு தீ வைக்கும் விசமிகள் பின்னர் விறகை வெட்டும் செயற்பாடு நீண்ட காலமாகத் தொடர்ந்து வருவதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
கருத்துக்களேதுமில்லை