வவுனியாவில் குடும்பமொன்றின் மர்ம மரணம்: விசாரணைகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தல்
வவுனியாவில் நால்வர் அடங்கிய குடும்பத்தின் மர்ம மரணம் தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுத்து உண்மையைப் பகிரங்கப்படுத்துமாறு பொலிஸ்மா அதிபரிடம் கேட்டுக்கொள்கின்றோம் என ரெலோவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில் –
வவுனியாவில் தந்தை, தாய் மற்றும் இரு பிள்ளைகள் உட்பட நால்வர் அடங்கிய குடும்பத்தினர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர்.
இவர்களின் மரணம் தொடர்பில் மாறுபட்ட பல கருத்துக்கள் வருகின்றன. உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கையும் இதுவரை முழுமையாகத் தரப்படவில்லை.
எனவே, இந்த மரணம் தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுத்து உண்மையைப் பகிரங்கப்படுத்துமாறு பொலிஸ்மா அதிபரிடம் கேட்டுக்கொள்கின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை