இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்தியத் தொழிலதிபர்கள்!
சுமார் 92 பேர் அடங்கிய வட இந்தியத் தொழிலதிபர்கள் குழு ஒன்று இலங்கைக்கு விஜயத்தை மேற்கொள்ள உள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் 17 ஆம் திகதி இந்திய நகையக சம்மேளனத்தலைவர் சுலானி மற்றும் ரமேஸ் தாக்கர் ஆகியோரின் தலைமையில் இந்தக்குழுவினர் இலங்கை வருகின்றனர்.
இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பில் இவர்கள் 18 ஆம் திகதியன்று இலங்கையின் தொழிலதிபர்களைச் சந்திக்கவுள்ளனர்.
இந்த தொழிலதிபர்கள் வருகை மற்றும் சந்திப்பு ஏற்பாடுகளை இலங்கை – இந்தியத் தொடர்பாளர் மனவை அசோகன் மேற்கொண்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை