புதுக்குடியிருப்பில் கள்ளநோட்டு அச்சிட்டவருக்கு நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு

யாழ்.புதுக்குடியிருப்பில் 35 இலட்சம் கள்ள நோட்டு அச்சிட்டவர் அச்சி இயந்திரத்துடன் கடந்த வியாழக்கிழமை சிறப்பு அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலையை சேர்ந்த 42 வயதுடைய குறித்த நபர் திருமணம் செய்து தேவிபுரம் பகுதிக்கு வந்து செல்வது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் இவர் இரண்டாவது தடவையாக கள்ளநோட்டு சம்பவத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

திருகோணமலை குச்சவெளிப்பகுதியில் கள்ளநோட்டுடன் கடந்த (08.09.2022) அன்று இவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் இவர் (09.03.2023) அன்று கள்ளநோட்டுக்களை அச்சிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி நபரிடம் கள்ளநோட்டு அச்சிடம் இயந்திரம் ஒன்றும் அச்சிடப்பட்ட 5000 ரூபா தாள்கள் 700 உம் மீட்கப்பட்டுள்ளன.

இதனை தொடர்ந்து சந்தேகநபரை புதுக்குடியிருப்பு பொலிஸார் முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது அவரை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.