திருக்கேதீச்சர இலக்கியப் பெட்டகம் திருமுருகன் எழுதிய நூல் வெளியீடு! நீலகண்டன் நினைவுப் பேருரையும் நடந்தன

சிவபூமி அறக்கட்டளை, தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானம் ஆகியவற்றின் தலைவரும் அகில இலங்கை இந்துமாமன்றத்தின் உப தலைவருமாகிய கலாநிதி ஆறு.திருமுருகன் எழுதிய திருக்கேதீச்சர இலக்கிய பெட்டகம் நூல் வெளியீடும், அகில இலங்கை இந்துமாமன்ற முன்னாள் தலைவர் அமரர் கந்தையா நீலகண்டன் நினைவுப் பேருரையும் கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

நல்லூர் கோவில் வீதியில் உள்ள அகில இலங்கை இந்துமாமன்ற யாழ்.பிராந்திய நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வில் முன்னதாக அகில இலங்கை இந்துமாமன்ற முன்னாள் தலைவர் அமரர் கந்தையா நீலகண்டனின் உருவப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து நூல் வெளியீடு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் நல்லூர் திருஞானசம்பந்தர் ஆதின முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், அகில இலங்கை இந்துமாமன்ற உப தலைவர் ஆறு.திருமுருகன், ஆன்மீகச்சுடர் ரிஷி தொண்டுநாத சுவாமிகள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.