தெஹிவளை பாடசாலையொன்றின் மாணவனை கொடூரமாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய இரு மாணவர்கள்!
தெஹிவளை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 11 வயதுடைய மாணவன் ஒருவன் கொடூரமான முறையில் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் தெஹிவளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட இரு மாணவர்களும் அந்தப் பாடசாலையின் 10ஆம் தரத்தில் பயிலும் மாணவர்கள் எனவும், பாதிக்கப்பட்ட மாணவன் அதே பாடசாலையில் 6ஆம் தரத்தில் கல்வி பயில்பவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த மாணவனை சந்தேகிக்கப்படும் இரு மாணவர்கள் பல சந்தர்ப்பங்களில் கொடூரமான முறையிவ் பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
சந்தேக நபர்களான இரு மாணவர்களும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை. இச்சம்பவம் தொடர்பில் தெஹிவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை