கண்டி மாணவர் படையணி பயிற்சி முகாமில் மாணவியிடம் பாலியல் சீண்டல் புரிந்த நபர் தப்பியோட்டம்

கண்டி, ஹசலக்க மாணவர் படையணி பயிற்சி முகாமில் பயிற்சி முடிந்து, விடுதியில் தூங்கிக்கொண்டிருந்த மாணவியிடம் பாலியல் சீண்டல் புரிந்ததாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கண்டி நகரில் உள்ள பிரபல பாடசாலையொன்றை சேர்ந்த குறித்த மாணவி இரவில் தனது விடுதி அறையில் நித்திரையில் இருந்தபோது, இனந்தெரியாத நபரொருவர் உடல் ரீதியான பாலியல் சீண்டலில் ஈடுபட்டு தப்பிச் சென்றுள்ளார் என அந்த மாணவி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஹசலக்க பொலிஸாரும் ரன்தெம்பே மாணவர் படையணி பயிற்சி முகாம் அதிகாரிகளும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.