ரயில் கழிவறையில் சிசுவை கைவிட்டுச் சென்ற சம்பவம் : பண்டாரவளை பிரதான பொலிஸ் பரிசோதகருக்கு ஏதிராக ஒழுக்காற்று நடவடிக்கை
கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலின் கழிவறையில் கைவிட்டுச் சென்ற சிசுவின் பெற்றோர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட பெண்ணை அசௌகரியத்துக்கு உள்ளாக்கியமை தொடர்பில் பண்டாரவளை தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகரிடம் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினர் இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் எனப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை 7 மணியளவில் கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி புறப்படவிருந்த ரயிலின் கழிவறையில் இருந்து குறித்த சிசு மீட்கப்பட்டு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இவ்வாறு சிசுவை கைவிட்டுச்சென்றவர்கள் தொடர்பில் பொலிஸார் துரித விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். அதன் அடிப்படையில் சிசுவின் பெற்றோர் என அடையாளம் காணப்பட்ட 26 வயதான இளைஞன் மற்றும் 25 வயதான யுவதியும் பண்டாரவளை மற்றும் கொஸ்லந்த பகுதிகளில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
கைது செய்யப்பட்ட இளைஞன் தெஹிவளை பிரதேசத்தில் பணி புரிந்து வந்துள்ளார் என்பதுடன் திருமணமாகாத நிலையில் குறித்த யுவதி கருவுற்றிருந்தை அறிந்த இளைஞன் அவரை கொழும்புக்கு அழைத்து வந்து தங்க வைத்தார் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்தது.
சந்தேகநபர்களை நேற்றைய தினம் பண்டாரவளை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டு எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண்ணை அசௌகரியத்திற்கு உள்ளாக்கியமை தொடர்பில் பண்டாரவளை தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகரிடம் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினர் இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் எனப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சிறுவர் மற்றும் பெண்கள் தொடர்பில் எவ்வாறு செயல்பட வேண்டும் என பொலிஸ் மா அதிபரினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகளுக்கு புறம்பாக செயற்பட்டமை தொடர்பிலேயே இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குழந்தையின் தாயைக் கைது செய்த பொலிஸார் சந்தேக நபரை விசாரிப்பது மற்றும் விசாரணையின் விவரங்களைக் கருத்தில் கொள்ளாமல் பெண்ணுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியரத தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை