பிழையான தகவலை வழங்கும் அறிவித்தல் பலகையால் திக்குமுக்காடும் பயணிகள்
கண்டி மாவட்டத்தில் உள்ள மடவளை தெல்தெனிய வீதியில் அமைக்கப்பட்டுள்ள பெயர்ப்பலகையில் பாரிய தவறு காரணமாக பயணிகள் திக்குமுக்காடுகின்றனர்.
அதாவது கண்டியிலிருந்து மாத்தளைக்கு உள்ள தூரம் சுமார் 30 கிலோ மீற்றர் ஆகும். இருப்பினும் குறித்த அறிவிப்பு பலகையின் படி 10.5 கிலோ மீற்றராகும்.
அதேநேரம் மேற்படி அறிவித்தல் பலகையில் போடப்பட்டுள்ள மடவளையிலிருந்து மாத்தளைக்கு உள்ள தூரம் சுமார் 20 கிலோ மீற்றர் ஆகும். ஆனால் மேற்படி அறிவிப்பு பலகை 2 கிலோ மீற்றர் எனக் காட்டுகிறது.
இந்தக் குளறுபடி காரணமாக வெளியிடங்களில் இருந்து வரும் சாரதிகள் மிகவும் குழப்பமான சூழ் நிலையை எதிர்கொள்கின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்டவர்கள் இதனைத் திருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கேட்கின்றனர்.
கருத்துக்களேதுமில்லை