போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பொறியியலாளர் கொஸ்மோதர பொலிஸாரால் கைது!
போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக கூறப்படும் சிவில் பொறியியலாளர் என கூறப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொஸ்மோதர பொலிஸார் தெரிவித்தனர்.
புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் வரெல்ல பிரதேசத்தில் வசிக்கும் 31 வயதுடைய சிவில் பொறியியலாளர் ஒருவரே சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை இலக்கு வைத்து மாத்திரை ஒன்றுக்கு 100 ரூபாவுக்கு விற்பனை செய்வதாக சந்தேகநபர் வாக்குமூலம் அளித்துள்ளதாக சுற்றிவளைப்பை மேற்கொண்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை