நியூசிலாந்துக்கு வெற்றி – வாய்ப்பை இழந்த இலங்கை அணி

இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் நோக்கில் இலங்கை அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடியது.

கிறைஸ்ட்சேர்ச்சில் ஆரம்பமான முதலாவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணித் தலைவரின் அழைப்பின் பேரில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, தமது முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 355 ஓட்டங்களையும் இரண்டாவது இன்னிங்ஸில் 302 ஓட்டங்களையும் பெற்றது.

இந்நிலையில் நியூசிலாந்து தனது முதல் இன்னிங்சில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 373 ஓட்டங்களை பெற்றது.

285 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி நகர்ந்த நியூசிலாந்து அணி நேற்றைய (12) ஆட்டத்தை நிறுத்தும் போது தமது இரண்டாவது இன்னிங்ஸில் 1 விக்கெட் இழப்பிற்கு 28 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

கிறைஸ்ட்சர்ச்சில் பெய்த மழையினால் இன்றைய ஆட்டம் ஆரம்பமானது நான்கரை மணித்தியாலங்கள் தாமதமானதுடன், 27 ஓவர்கள் பந்து வீசப்படவில்லை.

இறுதியில் 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு நியூசிலாந்து அணி வெற்றி இலக்கான 285 ஓட்டங்களை பெற்றது.

இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது இலங்கை அணி.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.