நாடாளுமன்றமும், அரசாங்கமும், ஜனாதிபதியும் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற வேண்டும் – கர்தினால்
52 நாள் ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கையின் போது உயர் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தற்போது மட்டும் நாடாளுமன்றம் ஊடாக நீதிமன்றத் தீர்ப்பை புறக்கணிக்க காரணம் என்னவென இலங்கை கத்தோலிக்க திருச்சபை கேள்வி எழுப்பியுள்ளது.
உள்ளூராட்சி தேர்தலூக்காக 2023 வரவு செலவுத்திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்ட எந்தவொரு நிதியையும் நிறுத்தி வைப்பதைத் தடுக்கும் வகையில், இலங்கையின் உயர் நீதிமன்றம் மார்ச் 3 ஆம் இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்திருந்தது,
இந்த உத்தரவை அடுத்து அரசாங்கம் கொண்டுவந்த நாடாளுமன்ற சிறப்புரிமை பிரேரணை குறித்து, கொழும்பில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய போதே கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார்.
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றமும், அரசாங்கமும், ஜனாதிபதியும் கடமைப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு நாடாளுமன்ற சிறப்புரிமைகளைக்கொண்டு உயர் நீதிமன்றத்தை அவதூறாகப் பேசும் உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கொழும்பு பேராயர் வலியுறுத்தியுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை