சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவியை தடுக்கும் சதித்திட்டமே தொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் – ஐ,தே.க. தேசிய சேவை சங்கம்

சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவியை தடுப்பதற்கான சதித்திட்டமே தொழிற்சங்கங்களின் பணி பகிஷ்கரிப்பு போராட்டம். சாதாரண தொழிற்சங்கங்கள் இதில் சிக்கிக்கொள்ளக் கூடாது.

அத்துடன் தொழிற்சங்களின் சாதாரண பிரச்சினைகளுக்கு தீர்வுகாண தேசிய சேவை சங்கம் எப்போதும் தயாராகவே இருக்கிறது என ஐக்கிய தேசிய கட்சி தேசிய சேவை சங்கத்தின் உபதலைவர் சுனில்த சில்வா தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற செயதியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில் –

தொழிற்சங்கங்கள் எப்போதும் தமது கோரிக்கைகளை பெற்றுக்கொள்ளவே பகிஷ்கரிப்பு போராட்டங்களை முன்னெடுத்து வந்திருக்கின்றன.

ஆனால் அண்மைக்காலங்களில் இடம்பெற்றுவந்த தொழிற்சங்க போராட்டங்கள் எந்த நோக்கத்துக்கு செய்கிறார்கள் என யாருக்கும் தெரியாது.

தொழிற்சங்க தலைவர்கள் அவர்களின் சொந்த தேவைகளுக்காக தொழிற்சங்க போராட்டங்களை முன்னெடுக்கும் நிலையே இருந்து வருகிறது. இதனால் சாதாரண தொழிலாளர்களும் பாதிக்கப்படுகின்றனர். எதற்காக போராட்டம் மேற்கொள்கிறோம் என அதிகமான தொழிலாளர்கள் தெரியாமல் இருக்கிறனர்.

அத்துடன் தொழிற்சங்கங்கள் மேற்கொள்ள இருக்கும் பகிஷ்கரிப்பு போராட்டம், சர்வதேந நாணய நிதியத்திடமிருந்து கிடைக்க இருக்கும் கடன் உதவியைத் தடுப்பதற்கான சதித்திட்டமாகும்.

இந்த நிதி உதவி கிடைக்காவிட்டால் சாதாரண மக்களுக்கு கிடைக்க இருக்கும் நிவாரணங்கள் இல்லாமல் போகும். அதனால் சாதாரண தொழிலாளர்கள் இதில் சிக்கிக்கொள்ளக்கூடாது.

தொழிற்சங்களுக்கு பிரச்சினைகள் இருக்கலாம். அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண எமது தேசிய சேவை சங்கம் தயாராகவே இருக்கிறது.

மேலும் தொழிற்;சங்கங்கள் முன்னெடுக்க தீர்மானித்துன்ன பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தில் இருந்து தற்போது சில தொழிற்சங்கங்கள் ஒதுங்கிக்கொள்ள தீர்மானித்திருக்கின்றன. குறிப்பாக வங்கித்துறை போராட்டத்தில் இருந்து விலகிக்கொண்டுள்ளது.

அதேபோன்று போக்குவரத்து, தபால் துறை, ரயில் சேவை போன்ற தொழிற்சங்கங்களும் பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தில் கலந்துகொள்வது தொடர்பில் கலந்துரையாடி வருகின்றன.

அத்துடன் வைத்தியர்கள், பொறியியலாளர்கள் போன்ற ஒரு லட்சத்துக்கும் அதிக சம்பளம் பெறுபவர்களிமிருந்தே வரி அறவிடப்படுகிறது.

அவர்களிடமிருந்து பெறப்படும் வரி அந்தத் துறையில் பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்களுக்கே செலவிடப்படுகிறது. அதனால் பல்கலைக்கழக மாணவர்கள் வீதிக்கிறங்கி அதனை இல்லாமலாக்கிக்கொள்ள வேண்டாம் என மாணவர்களிடம் கேட்டுக்கொள்கிறோம். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.