இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்துக்கு 10 வழிகாட்டல் பரிந்துரைகள் – கோப் குழு
இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்துக்கு 10 வழிகாட்டல் பரிந்துரைகளை கோப் குழு முன்வைத்துள்ளது. 2021 ஆம் ஆண்டுக்கான கூட்டுத்தானத்தின் அறிக்கை இதுவரை நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்காமல் இருப்பது நாடாளுமன்றத்தைப் புறக்கணிக்கும் ஒரு செயற்பாடாகக் கருதப்படும். ஆகவே காலதாமதமாகியுள்ள சகல அறிக்கைகளையும் ஒரு மாத காலத்துக்குள் நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும் என அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (கோப்) தலைவர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்துக்கு ஆலோசனை வழங்கினார்.
அரசாங்க பொறுப்பு முயற்சிகள் தொடர்பான குழு (கோப்) கடந்த வாரம் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் கூடியது.
இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் கடந்த கால அறிக்கைகள், செயலாற்றுகை தொடர்பில் ஆராயப்பட்டன.
இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் இதுவரை காலதாமதமாகியுள்ள அனைத்து வருடாந்த அறிக்கைகளையும் ஒரு மாத காலத்துக்குள் சமர்ப்பிக்குமாறு கோப் குழு பரிந்துரை, காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் கீழ் மாலைதீவு மற்றும் சீஷெல்ஸில் உள்ள பெரும் நிதி இழப்பை சந்தித்துள்ள இரண்டு கிளைகளை முறையாக மூடுவதற்கு கோப் குழுவால் வெளிவிவகார அமைச்சுக்கு அவதானிப்புகளை அனுப்ப நடவடிக்கையை மேற்கொள்ளல்.
காப்புறுதிக் கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான ஜனாதிபதி செயலகத்தால் தற்போது பயன்படுத்தப்படும் காணி மற்றும் கட்டடம் தொடர்பான குத்தகை ஒப்பந்தம் தொடர்பில் இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் தலைவருக்கு கோப் குழு அறிவுறுத்தல்.
இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்துடன் தொடர்புடைய போலி தரகர்களுக்கு எதிரான குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பாக இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோப் குழு இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் தலைவருக்கு அறிவுறுத்தல் விடுத்தது.
நீண்ட கால காப்பீட்டு வணிகம் மற்றும் பொதுக் காப்பீட்டு வணிகம் இரண்டையும் தனித்தனி நிறுவனங்களாகப் பிரிப்பது தொடர்பாக விரைவில் தீர்மானிக்குமாறு நிதியமைச்சின் செயலாளருக்கு கோப் குழு பரிந்துரை செய்தது.
காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் எதிர்கால சந்தைப்படுத்தல் மூலோபாயத் திட்டங்கள் குறித்த அறிக்கையை விரைவில் குழுவிடம் சமர்புக்குமாறு பிரதம நிறைவேற்று அதிகாரிக்கு பரிந்துரை செய்தது
காப்புறுதி இழப்பீட்டை பெறுவதற்கான நடைமுறை தொடர்பாக காப்புறுதியாளர்களுக்கு முறையாக அறிவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோப் தலைவர் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்துக்கு அறிவிப்பு விடுத்தது.
கூட்டுத்தாபனத்தின் மொத்த மனித வளத்தை கணக்காய்வு செய்து ஆறு மாதங்களுக்குள் குழுவிடம் அறிக்கை சமர்ப்பிக்குமாறு காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் தலைவருக்கு கோப் குழு அறிவிப்பு.
காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தால் விலைமனுக் கோரி அமைச்சரவையின் அனுமதியுடன் தனி தரப்பினரிடமிருந்து விலைமனுக் கோரி 100 டொலர் விலைமனுப் பெறுமதியில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துடன் தொடர்புடைய அரேபிய நாடுகளிலுள்ள வெளிநாட்டுப் பணியாளர்களுக்கான காப்புறுதி முறையொன்றை அறிமுகப்படுத்தியமை சம்பந்தமாக கூட்டுத்தாபனத்தின் வகிபங்கு தொடர்பில் விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதம நிறைவேற்று அதிகாரிக்கு கோப் குழு பரிந்துரை செய்தது.
கருத்துக்களேதுமில்லை