வைத்தியரான தனது மனைவியை கத்தியால் குத்திய ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர்!
கொழும்பு சொய்ஸா வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவர் கணவரால் கத்தியால் குத்தப்பட்டு பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக கம்பஹா நுங்கமுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
படுகாயமடைந்த வைத்தியர் ராகம போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வைத்தியரை கத்தியால் வெட்டி காயப்படுத்திய கணவர் கம்பஹா மாவட்டத்தில் உள்ளூராட்சி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் என பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை