ரயில் திணைக்கள ஊழியர்களின் விடுமுறைகள் உடன் அமுலாகும் வகையில் இரத்து!
இலங்கை ரயில்வேயின் அனைத்து ஊழியர்களின் விடுமுறையும் உடன் அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே அத்தியட்சகர் தெரிவித்தார்.
ரயில்வே தொழிற்சங்கம் இன்று நள்ளிரவு முதல் 24 மணி நேர வேலை நிறுத்தத்தை அறிவித்ததை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதிய வரிக் கொள்கை மற்றும் பல பிரச்சினைகளுக்கு எதிராக பல தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கும் பாரிய வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக இந்த தொழிற்சங்க நடவடிக்கைக்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.
கருத்துக்களேதுமில்லை