யோஷிதவின் தேர்தல் பயணத்தை தடுத்த கோட்டாபய

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது புதல்வர் யோஷித ராஜபக்ஷ நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடத் தயாராக இருந்த போதிலும், டலஸ் அழகப்பெரும கோட்டாபய ராஜபக்ஷவிடம் விடுத்த கோரிக்கையால் அது நடக்கவில்லை என விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.

சுதந்திர மக்கள் முன்னணியின் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

பதுளையில் டிலான் ஒரு நொடிப்பொழுதில் தப்பித்தார். யோஷிதவையும் பதுளையில் களமிறக்க திட்டமிட்டார்கள்.

அந்த நாள்களில் மஹியங்கனையில் தேனுகவும் குழப்பத்தில் இருந்தார். யோஷிதவை களமிறக்கவுள்ளோம் என டலஸ் கோட்டாபயவிடம் கூறியபோது அந்த முட்டாள் வேலையை செய்துவிடாதீர்கள் என கோட்டாபய கூறியிருந்தார்.

அப்படி செய்தால் ஆடை அணிந்து வீதியில் செல்ல முடியாமல் போய்விடும் என கோட்டாபய குறிப்பிட்டார்.

எப்படியோ தீவிர முயற்சிகளை மேற்கொண்டு கோட்டாபய அதனை தடுத்து நிறுத்தி விட்டார் என விமல் வீரவன்ஸ மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.