30 நாட்களாக மகனை காணவில்லை! பெற்றோர் விடுத்துள்ள உருக்கமான வேண்டுகோள்
பதுளை, பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஸ்பிரிங்வெளி தோட்ட, நாவலவத்தையில் (4ஆம் பிரிவு) வசித்து வந்த விவேகானந்தன் ரகுமான் (வயது -16) என்ற பாடசாலை மாணவனை கடந்த பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதியிலிருந்து காணவில்லை என பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
பெத்தேகம பகுதியில் உள்ள சகோதர மொழிப் பாடசாலையில் தரம் 11 இல் கல்வி கற்று வந்த குறித்த மாணவன் சம்பவ தினமன்று பெத்தேகம புரான மகா விகாரையில் நடைபெற்ற மேலதிக வகுப்பிற்கு செல்வதாக கூறிச் சென்றுள்ளார்.
அவர் இறுதியாக சிவப்பு நிற மேற்சட்டையும், நீல நிற நீள் காற்சட்டையும் அணிந்திருந்ததுடன், ஊதா நிறப் புத்தகப் பையை கொண்டு சென்றுள்ளார்.
இவர் குறித்த தகவல் அறிந்தோர் 0760178821, 0772405245 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்குமாறு தந்தை விவேகானந்தன் மற்றும் தாயார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை