அடிப்படை உரிமை மீறல் மனுவை மீளப் பெற்றார் முஜிபுர் ரஹ்மான்!
2023 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமைகள் மனுவை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நேற்று (செவ்வாய்க்கிழமை) திரும்பப் பெற்றார்.
2023 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எவ்வித இடையூறும் இன்றி நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உத்தரவிடக் கோரி உரிய மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனு நேற்று, விஜித் மலல்கொட, ஷிரான் குணரத்ன மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, இந்த மனுவை மேலும் தொடர உத்தேசிக்கவில்லை என மனுதாரர் சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அதன்படி, கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதியரசர்கள் அமர்வு, மனுவை திரும்பப்பெற அனுமதித்தனர்.
கருத்துக்களேதுமில்லை