ஜப்பானில் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி பணமேசாடி: ஆசிரியருக்கு எதிராக குற்றச்சாட்டு!
ஜப்பானில் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி தலா 12 இலட்சம் ரூபா வீதம் பெற்றுக் கொண்டு பலரிடம் பண மோசடி செய்தமை தொடர்பில் தெம்பருவெவ பிரதேசத்தில் உள்ள பிரதான பாடசாலை ஒன்றின் ஆசிரியர் ஒருவருக்கு எதிராக தங்காலை பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவுக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அந்த பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்துடன் இணைந்து ஜப்பானில் வேலை பெற்றுத் தருவதாக போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து, குறித்த ஆசிரியர் பெரும் எண்ணிக்கையானோரை ஏமாற்றி சுமார் ஒரு கோடி ரூபாவை பெற்றுக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்துக்களேதுமில்லை