வெல்லம்பிட்டியில் வீடுகளை உடைத்து திருடிய இருவர் கைது : பொருட்களின் ஒரு பகுதியும் மீட்பு!

வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள இரண்டு வீடுகளை உடைத்து சுமார் பத்து இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை திருடிய இருவரை மேல்மாகாண தெற்கு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர்கள் இருவரிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது, வீடுகளில் திருடப்பட்ட 5 மடிக்கணினிகள் மற்றும் 4 எரிவாயு சிலிண்டர்கள் என்பனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.

கடந்த 3ஆம் மற்றும் 4ஆம் திகதிகளில் இந்த திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

மேல்மாகாண தெற்கு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், திருட்டில் ஈடுபட்ட பிரதான சந்தேக நபர் கொலன்னாவில் வைத்து கைது செய்யப்பட்டதோடு, மற்றைய சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.