யுவதியைக் கடத்திச் சென்று வன்புணர்வு செய்த சந்தேகநபர் நையப்புடைப்பு
யுவதியொருவரைக் கடத்திச் சென்று வன்புணர்வு செய்த நபரொருவரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து நையப்புடைத்துள்ள சம்பவம் குருநாகல் அருகே நடைபெற்றுள்ளது
புதன்கிழமை இரவு இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
குருநாகல், பொல்பித்திகம நகரில் கணனி வகுப்பொன்றுக்கு சென்றிருந்த யுவதியொருவர் வீடு திரும்ப பஸ் இன்றி வீதியில் காத்து நின்றிருக்கின்றார்.
அப்போது அந்த வழியால் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர், யுவதியை அவரது வீட்டில் இறக்கி விடுவதாகக் கூறி மோட்டார் சைக்கிளில் ஏற்றி சென்றுள்ளார்.
எனினும் யுவதியின் வீட்டில் இறக்கி விடுவதற்குப் பதில் தன் வீட்டுக்கு அழைத்து வந்து, பலவந்தப்படுத்தி வன்புணர்வு செய்துள்ளார்.
யுவதி தப்பிச் செல்ல முற்பட்ட போது பலமாக தாக்கவும் செய்துள்ளார். இதனையடுத்து யுவதி கூக்குரல் இட்டநிலையில், அயலவர்கள் திரண்டு வந்து யுவதியை வன்புணர்வு செய்த நபரைக் கடுமையாகத் தாக்கி பொல்பித்திகம பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த நபர் கடுமையான காயங்களுடன் பொல்பித்திகம வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
பொலிஸார் அவரைக் கைது செய்துள்ள நிலையில், வைத்தியசாலையில் அவர் பொலிஸாரின் கண்காணிப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருகிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை