இந்திய உயர்ஸ்தானியகத்தின் அணுசரனையில் கல்முனையில் வாழ்வாதார உதவித் திட்டங்கள் வழங்கி வைப்பு!

சர்ஜுன் லாபிர்)

கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வரரும், ரகுமத் பவுண்டேஷனின் ஸ்தாபக தலைவருமான ரகுமத் மன்சூர் முயற்சியினாலும் அவரின் தலைமையின் கீழும் இந்திய உயர்ஸ்தானியத்தின் அனுசரணையுடன் சுமார் இரண்டு மில்லியனுக்கு அதிகமான  உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று(15) கல்முனை ஆஸாத் பிளாஸா மண்டபத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி கலந்து கொண்டு சிறப்பித்ததோடு கெளரவ அதிதிகளாக கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஆரிகா காரியப்பர், எம்.எஸ்.எம் ஹாரிஸ் (நவாஸ்), கல்முனை பிரதேச செயலக  உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எம்
ஜெளபர் ,கல்முனை பல்நோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவர் ஏ.எம் ஹணீபா,இஸ்லாமபாத் முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளர் பி.டி ஜமால்,மெளலவி ஏ.ஆர் இர்பான்,அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ஏ.எம் உவைஸ், எஸ்.எச் அமீர் உட்பட பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந் நிகழ்வில் குறித்த பயனாளி ஒருவருக்கு சுமார் 10000/- ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.