இ.போ.ச வில் நீண்டதூர பயணத்தை மேற்கொள்வதற்கு முன் ஆசனப்பதிவு : இணையமும் தொலைபேசி இலக்கமும் அறிமுகம்!
இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான நீண்ட தூர சேவை பஸ்களில் ஆசனங்களை இணையத்தில் முன்பதிவு செய்யும் வசதி நேற்று (15) அறிமுகப்படுத்தப்பட்டது.
மாகும்புர போக்குவரத்து நிலையத்தில், நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத் தலைமையில் இது தொடர்பான ஆசன ஒதுக்கீடு இணையம் திறந்து வைக்கப்பட்டது.
இருக்கை முன்பதிவு தொடர்பான இணையதளமும் அங்கு திறக்கப்பட்டது. மேலும், மூன்று மொழிகளிலும் 24 மணி நேரமும் செயற்படும் வகையில் 1315 என்ற தொலைபேசி மூலம் இருக்கைகளை முன்பதிவு செய்ய வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
கருத்துக்களேதுமில்லை