கணக்காய்வு அறிக்கையை சமர்ப்பிக்காத கட்சிகளின் அங்கீகாரம் இரத்து – தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் 2021 ஆம் ஆண்டுக்கான கணக்காய்வு செய்யப்பட்ட கட்சியின் கணக்கு வெளிப்படுத்தல் அறிக்கையை 14 நாள்களுக்குள் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்காவிடின் கட்சியின் அங்கீகாரம் நீக்கப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தலைமையில் ஆணைக்குழு வியாழக்கிழமை 10 மணியளவில் கூடியது.

ஆணைக்குழுவின் உறுப்பினர்களான எஸ்.பி. திவாரத்ன, எம்.எம்.மொஹமட் மற்றும் கே.பி.பி.பதிரன ஆகியோர் கலந்துகொண்டனர்.

1991 ஆம் ஆண்டின் முதலாம் இலக்க நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தின் 8(4) அத்தியாயத்துக்கு அமைய அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் தமது கணக்காய்வு அறிக்கையை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு ஒப்படைக்க வேண்டும்.

இதற்கமைய 2021 ஆம் ஆண்டுக்கான கணக்காய்வு அறிக்கையை சமர்ப்பிக்காத அரசியல் கட்சிகளிடம் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பலமுறை ஆணைக்குழுவால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய இதுவரை கணக்காய்வு அறிக்கையை சமர்ப்பிக்காத அரசியல் கட்சிகள் இன்று (வெள்ளிக்கிழமை) இருந்து 14 நாள்களுக்குள் கட்சியின் கணக்காய்வு அறிக்கையை சமப்பிக்குமாறு பதிவு தபால் ஊடாக அறிவிக்க ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இந்த அறிவிப்புக்கு அமைய கணக்காய்வு அறிக்கையை சமர்ப்பிக்காத அரசியல் கட்சிகள் தொடர்பாக நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தின் 9(3) அத்தியாயத்தின் பிரகாரம் அந்தக் கட்சியின் அங்கீகார உரித்துரை நீக்கப்படும் என ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.