பெண்ணொருவரிடம் நம்பிக்கை அடிப்படையில் பணம் கொடுத்து ஏமாந்த முதியவர் உயிர் மாய்ப்பு – யாழில் சம்பவம்

மகன் அனுப்பிய பணத்தினை நம்பிக்கை அடிப்படையில் பெண்ணொருவருக்கு கொடுத்து ஏமாந்த முதியவர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளார்.

யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் வசிக்கும் முதியவர் ஒருவருக்கு , வெளிநாட்டில் உள்ள மகன் கட்டம் கட்டமாக சுமார் ஒரு கோடி ரூபாய் பணத்தினை வழங்கி , யாழ்ப்பாணத்தில் காணி வாங்கி வீடு கட்டுமாறு கூறியுள்ளார்.

மகனின் பணத்தினை பெற்றவர் காணி வாங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்ட போதிலும் , எதிர்பார்த்த காணி கிடைக்காமையால் , காணி வாங்குவதனை பிற்போட்டுள்ளார்.

அந்நேரம் அவருக்கு அறிமுகமான பெண்ணொருவர் தனது தேவைக்கு என முதியவரிடம் இருந்து பணத்தினை பெற்றுள்ளார். முதியவரும் நம்பிக்கை அடிப்படையில், மகனுக்கு தெரியாமல் பணத்தினை வழங்கியுள்ளார்.

பணத்தினை பெற்றுக்கொண்ட பெண் , பணத்தினை திருப்பி கொடுக்காதமையால் , முதியவர் ஏமாந்த நிலையில் , மகனும் காணியை வாங்குமாறு வற்புறுத்தி வந்த நிலையில் கடும் மனஉளைச்சலுக்கு உள்ளான முதியவர் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.