தனது வீடு எரிக்கப்பட்டமை குறித்த விசாரணையில் தாமதம் – கவலையுடன் கடிதம் அனுப்பினார் பிரசன்ன!
கடந்த வருடம் மே மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற அமைதியின்மையின் போது உடுகம்பலையில் உள்ள தனது வீடு எரிக்கப்பட்டமை தொடர்பான முறைப்பாட்டை விசாரணை செய்வதில் தாமதம் ஏற்பட்டமை தொடர்பில் கவலை தெரிவித்து நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விரைவில் ஆஜராகுவதற்கான திகதி மற்றும் நேரத்தை வழங்குமாறு நான்கு தடவைகள் எழுத்து மூலம் கோரியுள்ளதாக அவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதற்கான சந்தர்ப்பத்தை விரைவில் வழங்குமாறும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தனது கடிதத்தில் மேலும் கோரியுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை