மதுவரி திணைக்களத்தின் இவ்வாண்டுக்கான வருமானம் 35 வீதத்தால் குறைவடையக்கூடும் – மதுவரி திணைக்களம்
மதுவரி திணைக்களத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான வருமானம் 35 வீதத்தால் குறைவடையக்கூடும் என மதுவரி திணைக்கள ஊடகப் பேச்சாளர் கபில குமாரசிங்க தெரிவித்தார்.
2022 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களின் வருமானத்தை 2023 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களுடன் ஒப்பிடுகையில் 12.5 வீத வருமானம் குறைவடைந்துள்ளது.
2023 ஆம் ஆண்டு 217 மில்லியன் ரூபாவை வருமானமாக பெறுவதற்கு எதிர்பார்த்துள்ளபோதிலும், அதன் 65 வீதத்தை மாத்திரமே வருமானமாக ஈட்டிக்கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மதுபானங்களை சட்ட ரீதியில் விற்பனை செய்யும் நடவடிக்கை குறைவடைந்துள்ளமையே மதுவரி திணைக்களத்தின் வருமானம் குறைவடைவதற்கான பிரதான காரணமாகும் என அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில், உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கையின்படி, இலங்கையில் சட்ட ரீதியற்ற மதுபான விற்பனையானது 300 வீதத்தால் அதிகரித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய அண்மையில் பாராளுமன்றில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை