நாணயநிதியத்தின் தீர்மானத்திற்கு அமெரிக்கா வரவேற்பு

இலங்கைக்கான நிதி உதவிக்கு சர்வதேச நாணயநிதியம் அங்கீகாரம் வழங்கியுள்ளதை அமெரிக்கா வரவேற்றுள்ளது.

மிகப்பெரும் செய்தி பொருளாதார மீட்சி நோக்கிய பயணத்தில் முக்கியமான நடவடிக்கை என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.இலங்கை அரசாங்கம் சீர்திருத்தங்களை தொடர்ந்தும் முன்னெடுக்கவேண்டும்,சர்வதேச நாணயநிதியத்தின் திட்டமும் பொருளாதாரமும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதை உறுதி செய்வதற்காக கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை பூர்த்தி செய்யவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி மற்றும் வெளிப்படை தன்மை போன்ற விடயங்களிற்கு தீர்வை காண்பதற்கு அவசியமான கட்டமைப்பு மாற்றங்கள் நிரந்தர சீர்திருத்தங்களின் அவசியத்தை வலியுறுத்தியுள்ள அமெரிக்க தூதுவர் இலங்கையின் அனைத்து பிரஜைகளும் பொருளாதார வளர்ச்சி காண்பதற்கு இது அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.