மாரவில நீதிவான் நீதிமன்றில் வைக்கப்பட்டிருந்த 23 இலட்சம் ரூபா பணம் மாயம்!
மாரவில நீதிவான் நீதிமன்றில் வழக்குப் பொருட்களாகப் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த சுமார் 23 இலட்சம் ரூபா பணம் காணாமல் போயுள்ளதாக மாரவில பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நீதிமன்றத்தை மூடுவதற்கு முன்னர் மாரவில நீதிவான் நீதிமன்றப் பதிவாளர் பெட்டகத்தைச் சோதித்தபோது, பெட்டகத்தில் காணப்பட்ட சுமார் 23 இலட்சம் ரூபா பணம் காணாமல் போயிருந்ததை அவதானித்ததாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவம் தொடர்பில் மாரவில தலைமையக பொலிஸில் பதிவாளர் முறைப்பாடு செய்துள்ளார். இதன் பாதுகாப்புக்கு பெண் உத்தியோகத்தர் ஒருவரே பொறுப்பாக இருப்பதாக பதிவாளர் பொலிஸில் செய்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை