பல்லேகம பிரதேச வைத்தியசாலையை பாதுகாக்குமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்
மாத்தளை, லக்கல பல்லேகம பிரதேச வைத்தியசாலையை பாதுகாக்குமாறு கோரி பொதுமக்கள் (20) திங்கட்கிழமை ஆர்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.
வைத்தியசாலை முன் இடம்பெற்ற இவ் ஆர்பாட்டத்தில் அவர்கள் தெரிவித்தாவது,
குறிப்பிட்ட சில பௌதீக வளங்கள் காணப்பட்ட போதும் ஒரு சில உயர் மட்ட அழுத்தம் காரணமாக அவற்றை வேறு வைத்தியசாலைகளுக்கு மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
கடந்த கொவிட் தொற்று காலத்தில் விசேட வார்ட்கள் அமைக்கப்பட்டு சில விசேட உபகரணங்களும் வழங்கப்பட்டதாகவும் விசேட வைத்திய அதிகாரிகள் இல்லாத காரணத்தால் அவற்றைப் பயன்படுத்த முடியாமல் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் 3 மணித்தியாலங்கள் நீடித்த இந்த ஆர்பாட்டத்தின் பின் வைத்திய சாலை அதிகாரிகளுடன் இடம் பெற்ற பேச்சு வார்த்தையை அடுத்து ஆர்பாட்டம் தற்காபலிகமாக கைவிடப்பட்டதாகத் தெரிவித்தனர்.
கருத்துக்களேதுமில்லை