கைத்தொழிற் கல்வி, பயிற்சித் துறையை பலப்படுத்த கொரியாவுடன் ஒப்பந்தம்
கைத்தொழிற் கல்வி மற்றும் பயிற்சித் துறையை பலப்படுத்துவதற்காக கொரியாவின் மனிதவள அபிவிருத்தி சேவை மற்றும் இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபைக்கும் இடையிலான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.
இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் கீழ் இயங்கி வரும் நியாகம தேசிய தொழிற்பயிற்சி நிறுவனத்தை மேம்படுத்துதல் மற்றும் இயலளவு விருத்திக்காக 2.15 பில்லியன் கொரிய வொன்களை நன்கொடையாக வழங்குவதற்கு கொரிய வேலைவாய்ப்பு மற்றும் தொழில் அமைச்சின் கீழ் இயங்கி வரும் கொரியாவின் மனிதவள அபிவிருத்தி சேவை உடன்பாடு தெரிவித்துள்ளது.
உத்தேச கருத்திட்டம் இவ்வாண்டு தொடக்கம் இரண்டு வருடங்களில் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதுடன், அதற்காக கொரியாவின் மனிதவள அபிவிருத்தி சேவை மற்றும் இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபைக்கும் இடையில் ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
உத்தேச ஒப்பந்த வரைபுக்காக சட்டமா அதிபரின் ஒப்புதல், வெளிவிவகார அமைச்சு மற்றும் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உடன்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.
அதற்கமைய முன்மொழியப்பட்டுள்ள ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கருத்துக்களேதுமில்லை